ராமநாதபுரம் மாவட்ட துறைமுக காவல் நிலைய ஆய்வாளர் யமுனா தலைமையில் வழக்கமான ஆய்வை ராமேஸ்வரம் துறைமுகம், தனுஷ்கோடி பகுதியில் இன்று(நவ.09) காவல்துறையினர் செய்தனர்.
அப்போது ஒருவர் காவலரை பார்த்தவுடன் தப்பி செல்ல முயன்றார். உடனே அவரை காவலர்கள் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகள் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்த இடத்தை கூறினார். பிறகு காவல்துறையினர் அங்கிருந்த 363 மதுபான பாட்டில்களை கைப்பற்றியதோடு, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடல் கொந்தளிப்பினால் பாம்பன் பாலத்தின்மீது மோதும் மிதவைகள்!