ETV Bharat / state

இனி வரும் தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட மாட்டேன் - கருணாஸ் - திருவாடனை மக்களை பிடித்திருக்கிறது

ராமநாதபுரம்: இனி வரும் தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட மாட்டேன் என அத்தொகுதியின் எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.

karunas
karunas
author img

By

Published : Feb 11, 2021, 5:00 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்குட்பட்ட பள்ளிகளில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பு காசு கொடுத்து வந்ததாக தெரியவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகாலம் நிழலாக இருந்தவர் சசிகலா.

அதிமுகவினர் சசிகலாவை ஜெயலலிதாவின் மறு உருவமாகவே பார்க்கின்றனர். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நந்தனத்தில் தேவர் சிலை திறக்க உத்தரவாதம் தரும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்பேன். திருவாடானை தொகுதியில் இனி நான் போட்டியிட மாட்டேன். அதற்காக இந்தத் தொகுதி மக்களை குறைகூறவில்லை. அனைத்து சமுதாய மக்களும் எனக்கு வாக்களித்துள்ளனர்.

திருவாடானை மக்கள் நல்லவர்கள்; ஆனால் அரசியல்வாதிகள் நல்லவர்களாக இல்லை. எங்கும் போட்டியிட தயாராக இருக்கிறேன். அரசியல்வாதிகள், தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவர்கள் அப்படி இல்லாதபோது என்னை போன்ற எதார்த்தவாதி இங்கு பயணிப்பது மிகவும் கடினமாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கமல்ஹாசன் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.