தமிழ்நாட்டையும், இலங்கையையும் பாக் நீரிணை கடற்பகுதி பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவும், அதைத் தொடர்ந்துள்ள மணல் திட்டுகளான ராமர் பாலமும் பாக் நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவிலிருந்து பிரிக்கிறது.
தமிழ்நாட்டிலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது. இதற்கு முன்பாக பலர் நீந்திக் கடந்து உள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (48), தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.
தலைமன்னாரில் அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் தொடங்கிய சியாமளா கோலி 30 கி.மீ. தூரத்தை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு (13 மணி நேரம் 40 நிமிட நேரத்தில்) வந்தடைந்தார்.
இதன்மூலம் பாக் நீரிணையை நீந்திக் கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும், உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இது குறித்து தனுஷ்கோடி அரிச்சல்முனையில் செய்தியாளர்களிடம் பேசிய சியாமளா கோலி, “கடந்த ஆண்டே பாக் நீரிணை கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது.
ஆனால் கரோனா பரவல் காரணத்தினால் முடியாமல்போனது. பாக் நீரிணையை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்துச் சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்” என நம்பிக்கை ஊட்டினார்.
இதையும் படிங்க...இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்