ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கச்சத்தீவை மீட்பதற்கும் கடந்த காலத்தில் திராவிட கழகங்களும், காங்கிரஸ் ஆட்சியும் செய்த தவறுகளை சரி செய்வதற்கும், ராமேஸ்வரத்தை புண்ணிய தலமாக மாற்றுவதற்கும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும்.
அப்துல் கலாமின் அரசியல் கொள்கையை, நேர்மையை, ஒழுக்கத்தை பின்பற்றக்கூடியவர் ரஜினிகாந்த். அப்துல் கலாமின் கொள்கைகளை பின்பற்றக் கூடியவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் மோடியும், மாநிலத்தில் ரஜினியும் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது" என்றார்.
அப்போது, ரஜினிகாந்த் நீண்ட நாள்கள் கழித்து அரசியல் கட்சியை தொடங்க இருப்பது குறித்த கேள்விக்கு, "ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலில் ஈடுபடவில்லை. அவர் பெரிய தப்பு பண்ணிவிட்டார். மக்கள் அதனை எப்படி அங்கீகரிக்கீறார்கள் என பார்க்கலாம். பாஜக ரஜினியை முன்னிறுத்தவில்லை. இந்து மக்கள் கட்சிதான் ரஜினியை முன்னிறுத்துகிறது. நாங்கள் ரஜினிக்குதான் ஆதரவு, பாஜகவிற்கு ஆதரவு இல்லை" என பதிலளித்தார்.
இதையும் படிங்க: வடமாவட்டத்தில் திடீரென முளைத்த சுவர் விளம்பரம்: அஞ்சா நெஞ்சர் அண்ணன் மு.க.அழகிரி