ETV Bharat / state

காற்றின் வேகம் அதிகரிப்பு - ராமேஸ்வரத்தில் தடைப்பட்ட ரயில் சேவை! - 3 trains stopped

ராமநாதபுரம்: காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் பாம்பன் பாலத்தின் வழியாக இயக்கப்படவிருந்த மூன்று ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், காற்றின் வேகம் குறைந்தவுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்குரயில்வே தெரிவித்துள்ளது.

தடைப்பட்ட ரயில் சேவை
author img

By

Published : Jun 8, 2019, 10:36 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடல்நடுவில் செல்லும் பாலத்தில் பயணம் செய்ய ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ரயிலில் பயணிக்க ஆர்வம் கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று பாம்பன் பகுதியில் மணிக்கு சுமார் 60கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னை விரைவு ரயில், சேது விரைவு ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்கள் அக்காள் மடம், ரமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும், காற்றின் வேகம் குறைந்தவுடன் இந்த ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பு - ராமேஸ்வரத்தில் தடைப்பட்ட ரயில் சேவை

இராமநாதபுரம்
ஜூன்.8

காற்றின் வேகம் 60 கிமீ அதிகமாக இருப்பதால் மூன்று ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு மாலை 5 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் 6 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரயில் மற்றும் இரவு 8 மணிக்கு புறப்படும் சேது விரைவு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் காற்றின் வேகம் சுமார் 60 கிலோ மீட்டர் வரையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் வீசுவதால் சென்னை எக்ஸ்பிரஸ் அக்காள் மட்டத்திலும்,  மதுரை பயணிகள் ரயில் , சேது விரைவு ரயில் ராமேஸ்வரத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 சுமார் மூன்றரை மணி நேரங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் தவித்துவருகின்றனர்.
 காற்றின் வேகம் 50 கிலோ மீட்டருக்கு கீழ் குறையும் பட்சத்திலேயே ரயில்  பாம்பன் பாலத்தில்இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.