உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் கூட்டு பாலியல் வண்புனர்வு செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலை காவல்துறையினரே தகனம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தாலும், பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க செல்ல விடாமல் தடுத்து உண்மையை மறைக்க முற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது வருகிறது.
பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஜனநாயக மாதர் சங்க தாலுக்கா செயலாளர் ஆரோக்கிய நிர்மலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தின் போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உடனடியாக பதவி விலக வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:சாலையின் ஓரத்தில் கிடந்த கற்சிற்பங்கள்!