ETV Bharat / state

டெல்லி கலவரம் போல் நாளை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கலாம்  - ஹெச். ராஜா - டெல்லி கலவரம் போல் நாளை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும்

ராமநாதபுரம்: டெல்லியில் நடைபெற்று வரும் கலவரம் போல் தமிழ்நாட்டில் நடப்பதற்கு முன் போராட்டக்காரர்களை தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்த வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

h.raja
h.raja
author img

By

Published : Feb 26, 2020, 1:15 PM IST

Updated : Feb 26, 2020, 2:18 PM IST

பாஜகவைச் சேர்ந்த கட்சி தொண்டரின் திருமண விழாவில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதுகுறித்து பலமுறை சொல்லியும் இச்சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் பேசுகையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் வன்முறையாளர்கள் திட்டமிட்டு காவல் துறையினரையும் பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இந்தக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 54 பேர் காவல் துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலவரத்தை யார் செய்தார்கள் என்பது தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். துப்பாக்கியால் காவல்துறையை சுட்ட நபர் பெயர் ஷாருக் என அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

மேலும், டெல்லி கலவரத்தை போன்று சென்னை வண்ணாரப்பேட்டையிலும் துப்பாக்கிச் சூடும், கலவரமும் வெடிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்க, தமிழ்நாடு அரசு வன்முறையாளர்களையும், போராட்டக்காரர்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

இதையும் படிங்க: டெல்லி கலவரம் : மோடி, மத்திய பாதுகாப்பு குழுவுடன் அஜித் தோவால் இன்று ஆலோசனை!

Last Updated : Feb 26, 2020, 2:18 PM IST

For All Latest Updates

TAGGED:

BJP H.Raja
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.