ETV Bharat / state

'நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது..!' - அமைச்சரின் பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு

ராமநாதபுரம்: "ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது" எனும் அமைச்சர் மணிகண்டனின் பேச்சு, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மணிகண்டன்
author img

By

Published : Jun 29, 2019, 7:33 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி தாலுகாவிற்கு உட்பட்ட 19 பள்ளிகளுக்கு ரூ. 2.75 லட்சம் மதிப்பில் மடிக்கணினிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு ஹச்டி செட் ஆப் பாக்ஸ் வழங்கும் விழா, இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் மணிகண்டன், "ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 99 விழுக்காடு தண்ணீர் பிரச்னை பூர்த்தி அடைந்துள்ளது" என்று தெரிவித்தார். இந்த பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

'ராமநாதபுரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது' - அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக தொடர்ந்து மனுவை அளித்து வருகின்றனர். பல இடங்களில் 200, 300 அடி தோண்டிய பிறகும் கூட கிணறுகளில் நீர் கிடைக்காத நிலை உள்ளது. ராமநாதபுரத்தில் தினம்தோறும் மக்கள் நீருக்காக நீண்ட தூரம் செல்கின்ற நிலையில் அமைச்சரின் கருத்து மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Intro:ராமநாதபுரம்
ஜூன் 29 ராமநாதபுரத்தில் நிலத்தடி நீர் உயர்ந்திருப்பதாக அமைச்சர் மணிகண்டன் சர்ச்சை பேச்சு.

Body:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி தாலுகாவிற்கு உட்பட்ட 19 பள்ளிகளுக்கு இன்று 2.75 லட்சம் மதிப்பில் மடிக்கணினிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு ஹச்.டி செட் ஆப் பாக்ஸ் வழங்கும் விழா இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் கலந்து கொண்டனர், விழாவில் பேசிய அமைச்சர் மணிகண்டன் லேப்டாப் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தற்பொழுது பயின்று வரும் மாணவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். அரசியல் காரணங்களுக்காக மாணவர்கள் மத்தியில் இது போன்ற விஷயங்களை கிளப்பி விட வேண்டாம் என்றும் அதை மாணவர்கள் நம்பி போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அனைவருக்கு அவர்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக மடிக்கணினிகள். வழங்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக தொடர்ந்து மனுவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றும் மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் பல இடங்களில் 200 ,300 அடி தண்ணீருக்காக போடப்பட்ட கிணறுகளில் நீர் கிடைக்காத நிலை. 99 சதவீதம் தண்ணீர் பிரச்சனை பூர்த்தி அடைந்ததாக கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரத்தில் தினம்தோறும் மக்கள் நீருக்காக நீண்ட தூரம் செல்கின்ற நிலையில் அமைச்சரின் கருத்தை மக்கள் மத்தியில் வேதனை அளிக்கும் விதமாக அமைந்திருந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.