ETV Bharat / state

மாற்றுதிறனாளி மாணவியின் உடல் நல்லடக்கம்

இராமநாதபுரம்: நீட் தேர்வு எழுத சென்று உயிரிழந்த மாற்றுத் திறனாளி மாணவியின் உடல் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Student
author img

By

Published : May 6, 2019, 9:23 PM IST

இராமநாதபுரம் கமுதி அடுத்த பாப்பனம் கிராமத்தை சேர்ந்த முனியசாமியின் மகள் சந்தியா. நேற்று மாற்றுத்திறனாளி மாணவியான இவர் நீட் தேர்வு எழுதி முடித்துவிட்டு அரசு பேருந்தில் தனது தந்தையுடன் வரும் போது மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவி சந்தியாவின் உடலுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடித்து சொந்த கிராமமான பாப்பனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பரமக்குடி கோட்டாச்சியர் ராமன் சம்பவ இடத்திற்கு வந்து சந்தியாவின் குடும்பத்தில் உள்ள தகுதியான நபர்களுக்கு அரசு வேலைக்கு பரிசீலனை செய்யப்படும் என வாய்மொழி வாக்குறுதி கொடுத்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இராமநாதபுரம்
மே.6

நீட் தேர்வு எழுத சென்று உயிரிழந்த மாணவியின் உடல் அடக்கம்.

இராமநாதபுரம் கமுதி அடுத்த பாப்பனம் கிராமத்தை சேர்ந்த முனியசாமியின் மகள் மாற்றுத்திறனாளியான சந்தியா நேற்று நீட் தேர்வு எழுதி முடித்துவிட்டு அரசு பேருந்தில் தனது தந்தையுடன் வரும் போது மயக்கம் அடைந்து மதுரைக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் மாணவி  சந்தியாவின் உடலுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடித்து சொந்த கிராமான பாப்பனத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் பரமக்குடி கோட்டாச்சியர் ராமன் சம்பவ இடத்திற்கு வந்து சந்தியாவின் குடும்பத்தில் உள்ள தகுதியான நபர்களுக்கு  அரசு வேலைக்கு பரிசீலனை செய்யப்படும் என  வாய்மொழி வாக்குறுதி கொடுத்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  அடக்கம் செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.