ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமாடன் வலசை கிராமத்தில் அமையவுள்ள அரசு சட்டக் கல்லூரிக்கு கட்டடம் கட்டும் பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இன்று (நவம்பர் 11) காலை பணி நடைபெற்று வந்தது. இப்பணியில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
காலையில் பணி நடைபெற்றபோது மின்சார வயர் தவறி கீழே விழுந்தது. இதில், அருகிலிருந்த நான்கு கட்டட தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்ட சக பணியாளர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க புதிய செயலி அறிமுகம்!