ETV Bharat / state

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

author img

By

Published : Apr 3, 2021, 6:44 PM IST

ராமநாதபுரம்: பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

former
former

தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நாளை (ஏப்ரல் 4) தேர்தல் பரப்புரை செய்ய இறுதி நாள் என்பதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ராமநாதபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும்; ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மணிகண்டன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு என்று பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி, ராமநாதபுரம் நகரத்துக்குத் தேவையான குடிநீர் எனப் பல திட்டங்கள் இங்கு செயல்பட்டு வருகிறது.

ஆகையால், வருகின்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் குப்புராமுவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், ராமநாதபுரத்திற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் பெற்றுத் தருவார்" எனத் தெரிவித்தார்.

வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.