ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது.
இதனைத் தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர், மரைன் காவலர்கள், வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை மண்டபம் உயிரின வனச் சரகர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் காரையூர் கடல் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு வல்லத்தை சோதனை மேற்கொண்டதில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராமேஸ்வரம் வேர்கோடு பகுதியை சேர்ந்த லிங்கநாதன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!