ராமநாதபுரம் : பரமக்குடி நகரில் வைகை ஆறு இருபுற சர்வீஸ் சாலை, காகக்கா தோப்பு, தரைப்பாலம், புறநகர் பகுதிகளில் அடையாளம் தெரியாத சிலல் , சாலையோரம் நடந்து செல்லும் முதியோர், பெண்கள், இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களிடம் செல்போன் பறிப்பது, நகை, ஆடுகளை திருடுவது உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பரமக்குடியை அடுத்த முத்துராமலிங்கம்பட்டி கோபிநாதன் (37), கார்த்திக்ராஜா (32), கீரந்தைரமேஷ் (35), ஆலங்குளம் சார்லி (25), தெளிச்சாத்தநல்லூர் பாலகிருஷ்ணன் (19) ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் பரமக்குடி நகர், புறநகர் பகுதிகளில் ஆடு திருடுதல், வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஐந்து இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பரமக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தொடர் கொள்ளை: ஹெல்மெட் கொள்ளையன் சிக்கியது எப்படி?