ராமநாதபுரம்: தேவிபட்டினம் கடற்கரை நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தேவிபட்டினம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 16 சாக்கு மூட்டைகளில் அல்டிமாஸ் அசிபேட் 97% டிஎப் என்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் இருந்தது தெரியவந்தது.
வாகன ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் ராமநாதபுரம், கான்சாகிப் தெருவை சேர்ந்த செய்யது உமர் பாரூக் (26) என்பதும் தஞ்சாவூரில் இருந்து ஆவணங்கள் ஏதுமில்லாமல் இந்த பூச்சிக்கொல்லி மருந்தினை வேதாளையைச் சேர்ந்த சலீம் என்பவருக்காக கொண்டு செல்லவிருந்ததும், அங்கிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. அதனைதொடர்ந்து அந்த டாடா ஏஸ் வாகனத்துடன் பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. உமர் பாரூக் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்ற கொள்ளையன் போக்சோவில் கைது