ETV Bharat / state

மதுபானக் கடையை திறக்கக் கோரி மீனவப் பெண்கள் மனு - மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் மதுக்கடை திறக்கக் கோரி மீனவப் பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதுபான கடையை திறக்க கோரி மீனவ பெண்கள் மனு
author img

By

Published : Jul 22, 2019, 4:30 PM IST

அந்த மனுவில், ராமேஸ்வரம் புனிதத் தலமாக விளங்கி வருகிறது என்பதால் இங்கு மதுக்கடைகள் திறக்கவில்லை. இதைப் பயன்படுத்தி பலர் பெட்டிக் கடைகள், காய்கறிக்கடைகள், கடற்கரை ஓரங்கள் என அனைத்து இடங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர்.

மதுபானக் கடையை திறக்கக் கோரி மீனவப் பெண்கள் மனு

இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் காலையிலேயே குடிப்பதால் வருமானமின்றி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வளிக்கும் வகையில் ராமேஸ்வரம் பகுதியில் மதுபானக் கடையைத் திறக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

Intro:இராமேஸ்வரத்தில் மதுக்கடை திறக்க கோரி மீனவர்களின் மனைவிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு.

Body: இராமநாதபுர மாவட்டம் இராமேஸ்வரம் பகுதி புனிதத் தலமாக விளங்கிய வருகிறது என்பதால் அங்கு மதுக்கடை திறக்கவில்லை. இதைப் பயன்படுத்தி பலர் பெட்டிக் கடைகள், காய்கறிக்கடைகள்,கடற்கரை ஓரங்கள் என அனைத்து இடங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாகவும், இது குறித்து பகுதி மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்கள் அதிகாலையே மது அருந்திவிட்டு தொழிலுக்குச் செல்வது கிடையாது. இதனால் தினசரி வாழ்க்கை நகர்த்தும் மீனவர்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாக, முழு நேரமும் மது கிடைப்பதால வீட்டிற்கு பணம் கொடுப்பது இல்லை என்றும். மதுபான கடை இருக்கும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் இயங்கு என்பதால் சட்டவிரோத மது விற்பனை நிறுத்தப்படும். எனவே மதுக் கடையை திறக்க வேண்டும் என்று இராமேஸ்வரம் வேர்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் தலைமையில் மீனவர்களின் உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடையை அப்புறப்படுத்த மக்கள் மனுக்கள் கொடுப்பது வழக்கம் ஆனால் இங்கு திறக்கச் சொல்லி மனு கொடுத்தது அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.