கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகளில், கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மீனவர்கள் வாரத்தில் 6 நாட்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். மேலும், மீன்பிடித்து கரைக்கு வந்தபிறகு காலை 7 மணிக்குள் மீனவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்று விட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் மீனவர்கள் அதை பின்பற்றுவது இல்லை. மேலும், அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல், கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றனர்.
இந்நிலையில், காவலர்கள் அவர்களை கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கேரளா உள்ளிட்ட வெளி மாநில வாகனங்கள் மீன் எடுத்துச் செல்ல பாம்பன் பகுதிக்கு வருவதால், உரிய கண்காணிப்பில் காவல்துறை ஈடுபட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கரோனா