ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் நிகழ்வாக உள்ள நிலையில் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதை தடுத்து நிறுத்தக் கோரியும், பாதுகாப்பாக கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்த படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 11ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் உள்ள பெரிய விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி படகுகளில் கறுப்புக் கொடி கட்டி கச்சத்தீவுக்கு செல்ல உள்ளதாக அறிவித்தனர். அதற்கு முன்னேற்பாடாக ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பெரிய படகுகளில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தொழிலதிபர் மீது பொய் புகார்: பெண் ஆய்வாளர் உள்பட 3 பெண்கள் மீது வழக்கு