ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலுள்ள நாட்டுப்படகு மீனவர்கள், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு நாட்டுப் படகில் சென்றுவர 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்பேரில் 16 படகுகளில் சென்று வந்தனர்.
இந்தாண்டு மார்ச் 6, 7 ஆகிய தினங்களில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 30 நாட்டுப் படகுகளில் பெண்கள், குழந்தைகள் என ஒரு படகிற்கு 20 பேர் வீதம், 600 பேர் குடும்பத்துடன் சென்றுவருவதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கக்கோரி மனு கொண்டுவந்தனர்.
முதல் திருநங்கை பத்திரிகையாளருக்கு கேரளாவில் திருமணம்!
மேலும், நாட்டுப் படகில் சென்றுவர செலவாகும் 50 லிட்டர் டீசலை மானிய விலையில் அரசு வழங்கக் கோரியும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனுவை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவிடம் அளித்தனர்.
இதுமட்டுமில்லாமல், கச்சத்தீவு திருவிழாவுக்கு விசைப்படகு மூலம் செல்ல கட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றி அரசு சார்பில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என இரண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.