ETV Bharat / state

தமிழக மீனவர்களை எச்சரித்து விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்! - மீனவர்கள்

ராமநாதபுரம் : இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, அந்நாட்டு நீதிமன்றம் நிபந்தனையின்பேரில் விடுதலை செய்தது.

இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம்.
author img

By

Published : Sep 18, 2019, 8:34 PM IST

இராமநாதபுரம், மண்டபத்திலிருந்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 440 படகில் 1600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் பொன்னழகு என்பவருக்குச் சொந்தமான IND TN15 MM 91 என்ற எண் கொண்ட படகில், சுகுமார், கணேஷன், முருகன், பொன்னழகு ஆகிய 4 பேர் மீன் பிடிக்கச் சென்றனர்.

இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம்.

இந்நிலையில், அவர்களின் படகு கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது. இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் கச்சத்தீவில் தஞ்சம் அடைந்தனர். மீன்வளத்துறையும், இந்திய கடற்படையும் இலங்கை கடற்படைக்கு தகவலளித்தது. இதைத் தொடர்ந்து கச்சத்தீவு சென்ற இலங்கைக் கடற்படையினர் தீவில் இருந்த மீனவர்கள் 4 பேரையும் அழைத்துச்சென்று, பின் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்தது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்னழகு, சுகுமார் ஆகிய இரண்டு மீனவர்களையும் மீண்டும் எல்லை தாண்டி வரக்கூடாது என எச்சரித்து நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

மேலும் கணேசன், ஜாக்சன் ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள மன்னார், யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் இலங்கை இறுதிப் போரின்போது தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தனர். இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த இருவரும் இந்தியா செல்லக்கூடாது என்றும் சொந்த ஊரில் தங்க வேண்டும் என்றும் இலங்கை நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : மல்லிப்பட்டினம் கடலில் காணமல்போன மீனவர்களின் சடலங்கள் மீட்பு!

Intro:ராமநாதபுரம்
செப்.18

தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

Body: கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இராமநாதபுரம் மண்டபத்திலிருந்து 440 படகில் 1600க்கும் மேற்பட்ட மீனவர் கடலுக்குச் சென்றனர். இதில் பொன்னழகு என்பவருக்கு சொந்தமான IND TN15 MM 91 என்ற படகில் மண்டபம் பொன்னழகு, வேதாளையைச் சேர்ந்த சுகுமார், உச்சிப்புளியைச் சேர்ந்த கணேஷன்,முருகன் ஆகிய 4 பேர் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்களின் படகு கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது. இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் கச்சத்தீவில் தஞ்சம் அடைந்தனர். மீன்வளத்துறை மற்றும் இந்திய கடல் படை இலங்கை கடற்படைக்கு தகவலை அளித்தது. இதைத் தொடர்ந்து கச்சத்தீவு சென்ற இலங்கைக் கடற்படை தீவில் இருந்த மீனவர்கள் 4 பேரை அழைத்துச் சென்று, பின் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்தது.

இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன்னழகு, சுகுமார் ஆகிய இரண்டு மீனவர்களையும் மீண்டும் எல்லை தாண்டி வரக்கூடாது என எச்சரித்து நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

கணேசன் மற்றும் ஜாக்சன் ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள மன்னார், யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் இருவரும் இலங்கை இறுதிப் போரின் போது தமிழகத்திற்கு அகதியாகச் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தனர். இதனால் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தியா செல்லக்கூடாது என்று சொந்த ஊரில் தங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.