ETV Bharat / state

அனல் மின் நிலைய பாலம் அமைக்கும் பணி - மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டம் - பாலம் அமைக்கும் பணி

ராமநாதபுரம்: உப்பூரில் அமைய உள்ள அனல் மின் நிலையத்தின் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

uppur-thermal-power-plant
author img

By

Published : Sep 19, 2019, 5:03 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்குட்பட்ட உப்பூரில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கும் பணி கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போது அனல் மின் நிலையங்களுக்கு கடல் நீர் எடுத்துவந்து பின் கழிவுகளை கடலுக்குள் கொட்ட, அனல் மின் நிலையத்திலிருந்து 7.8 கி.மீ. தொலைவுக்கு மண்ணைக் கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது 1.5 கி.மீ வரையிலான பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த பாலம் கட்டுமானப் பணி தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாகவும், உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியினர் சுதந்திர தினத்தன்று மோர் பண்ணை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியிருந்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, தற்காலிகமாக உப்பூர் அனல் மின் நிலையத்திற்கான பால பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தார்.

பாலம் அமைக்கும் பணியை கண்டித்து மீனவர்கள்முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் உப்பூரில் பாலப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை கிராம கூட்டமைப்பு சார்பாக 25 கிராம மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்து 100க்கும் மேற்பட்ட படகுகளில் பாலப்பணி நடைபெறும் இடத்திற்கு சென்று கருப்புக்கொடி காட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பாலம் அமைக்கு பணி நடைபெற்றால் உயிரை கொடுத்து போராட்டம் நடத்துவோம் என மீனவ கிராமத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...

குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர்!

Intro:இராமநாதபுரம் அருகே உப்பூரில் அமைய உள்ள அனல்மின் நிலையத்தின் பாலம் அமைக்கும் பணி தொடர்வதை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து பாலப்பணியை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாலப் பணி நடைபெறும் இடத்திற்கு படகுகளில் சென்று கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துனர்

Body:ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் மங்களம் தாலுக்காவிற்க்கு உட்பட்ட உப்பூரில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையம் அமைக்கும் பணி 2016 தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தற்போது அனல்மின் நிலையத்திற்க்கு கடல் நீர் எடுத்துவந்து பின் கழிவுகளை கடலுக்குள் விட அனல் மின் நிலையத்திலிருந்து கடலுக்குள் 7.8 கீலோ மீட்டருக்கு மண்ணை கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 1.5 கிலோ மீட்டர் பாலப்பணி நிறைவடைந்து உள்ளது. இந்தப் பாலப்பணியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
உடனடியாக நிறுத்த வேண்டும் என கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று மோர்பண்ணை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர் பின் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர் தற்காலிகமாக உப்பூர் அனல்மின் நிலையப் பணி நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

முன்னறிவிப்பு இன்றி இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் உப்பூரில் பாலப்பணியை தொடர்ந்ததை அடுத்தி இன்று இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை கிராம கூட்டமைப்பு சார்பாக 25 கிராம மீனவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தம் செய்து 100 க்கும் மேற்பட்ட படகுகளில் பாலப்பணி நடைபெறும் இடத்திற்கு சென்று கருப்பு கொடி காட்டி போராடினர். பின் மேலும் பாலம் அமைக்கு பணி அறிவிப்பு கொடுக்காமல் தொடர்ந்தால் உயிரை கொடுத்து போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பேட்டி
துரைபாலன்
இராமநாதபுர கிழக்கு கடற்கரை கிராம கூட்டமைப்பு செயலாளர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.