ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைவலை இழுக்கும் பாரம்பரிய மீன்பிடி முறையை பின்பற்றி மீன்பிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஒரு சில கிராமங்களில் சில மீனவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு கரைவலை இழுக்க தடை விதிப்பதும், தடுப்பதும் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதனை மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையும் முறையாக கவனத்தில் எடுத்துக்கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேவிப்பட்டினம், அதை சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று (செப் 7) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.