ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளையும் 43 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். பின்னர் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த இரண்டு படகுகளையும் 12 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 10 படகுகளையும் 68 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்களும் தங்கச்சிமடத்தில் மூன்றாவது நாளாக இன்று (டிசம்பர் 22) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை விடுவிக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியிலுள்ள அந்தந்த துறைமுகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மீனவர்களின் இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Viral Video: பைக்கில் பாய்ந்த பைரவர்; தலைக்கவசத்தால் தப்பிய காவலர்