ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
#WATCH | Tamil Nadu | 18 Ramanathapuram fishermen with two boats arrested by Sri Lankan Navy for crossing the border: Indian Coast Guard. pic.twitter.com/k6Rr2vwO7l
— ANI (@ANI) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Tamil Nadu | 18 Ramanathapuram fishermen with two boats arrested by Sri Lankan Navy for crossing the border: Indian Coast Guard. pic.twitter.com/k6Rr2vwO7l
— ANI (@ANI) January 16, 2024#WATCH | Tamil Nadu | 18 Ramanathapuram fishermen with two boats arrested by Sri Lankan Navy for crossing the border: Indian Coast Guard. pic.twitter.com/k6Rr2vwO7l
— ANI (@ANI) January 16, 2024
இதனையடுத்து பாமக ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் உள்ளிட்ட பலர் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து இருந்தனர். குறிப்பாக, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் தெற்கு துறைமுகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரை, 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பில் மீன் பிடித்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை வழிமறித்து கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 டோலார் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை, மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் இலங்கையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு இந்த சிக்கலுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "ராமர் மயமாகி வரும் இந்தியா" - ஆளுநர் ஆர்.என்.ரவி!