ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சங்குமால் துறைமுக அருகே சிஐடியு அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் சிறுதொழில் மீனவர்கள் சார்பாக கருணாமூர்த்தி தலைமையில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீன்வள கொள்கை 2020, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020, மீனவர் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி வலியுறுத்தினர்.
குறிப்பாக நாட்டுப்படகுகள் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மீன் பிடித்தாலும், விசைப்படகுகள் ஒரு லட்சத்திற்கு மேல் மீன்பிடித்தாலும் அதற்கு வரி செலுத்த வேண்டும் என மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் தமிழ்நாடு அரசு, அந்நிய நாட்டு மீன்பிடி கப்பல்கள் மட்டும் இந்த கடல் பகுதிக்குள் தாராளமாக வரலாம், எத்தனை லட்சத்திற்கும் மீன்பிடிக்கலாம் என்னும் சட்டத்தை இயற்றியுள்ளது.
இது போன்ற மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கு வகையில் பல சட்டங்கள் வரவுள்ளதை கண்டித்து, சட்ட நகல்களை கிழித்து கடலில் வீசி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நாட்டுப்படகு, சிறு தொழில் மீனவர்கள் பங்கேற்றனர்.