ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பாலம் கடற்பகுதியில் நாட்டுப் படகில் சந்தான செல்வம், நாகராஜ், உமா பரத் (23) ஆகிய மூவர் நேற்று (மே 09) மாலை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மீனவர் உமாபரத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து படகை மற்ற இரண்டு மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்து மயக்கமடைந்த மீனவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உமா பரத் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், இது குறித்து மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.