ETV Bharat / state

காற்றினால் கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு! - ramanathapuram district news

ராமநாதபுரம்: நாட்டுப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.

மீனவர்
மீனவர்
author img

By

Published : Nov 30, 2020, 1:26 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இருக்கும் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த அந்தோணி (64), கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுப் படகில் மீன்பிடித்து வந்தார். இவர் நேற்றிரவு (நவ.30) ஆற்றங்கரைப் பகுதியில் வைகையாறு கலக்கும் முகத்துவாரத்தில் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது வீசிய சூறைக்காற்று காரணமாக கடலில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, தகவலறிந்த மீனவர்கள் அவரது உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சூறைக்காற்றினால் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.