ETV Bharat / state

காய்ச்சல் பரிசோதனை முகாம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

author img

By

Published : Apr 21, 2021, 1:56 PM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை முகாம்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

காய்ச்சல் பரிசோதனை முகாம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
காய்ச்சல் பரிசோதனை முகாம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புழுதிகுளம் மற்றும் முதுகுளத்தூர் வாகைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்.21) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதாரத்துறையின் சார்பாக நடத்தப்பட்ட காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து ஆட்சியர் தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 359 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் 48,203 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 8,539 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 56,742 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 4 கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் என 21 மையங்களில் 1,300க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப இதனை அதிகரித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் குறித்து கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல ஊரக பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்ய மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உடைகுளம் கிராமம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'டெல்லியில் 8 மணிநேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.