ராமநாதபுரம் பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான ஊரக்குடி, பொதுவக்குடி, லெட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
அவற்றை, வியாபாரிகள் வாங்கிச் சென்று நாமக்கல்லில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பிவருகின்றனர்.
கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார்செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம்செய்கின்றனர்.
கடந்த மாதம் டன் 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 8000 ரூபாய்க்கு விற்பனையானது. விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐம்பது ஆண்டுகளில் 1000 நீர்நிலைகள் அழிப்பு: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!