ETV Bharat / state

வேளாண் திருத்தச் சட்டங்கள்: அதானி மின் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்! - கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: வேளாண் திருத்த சட்டங்களைக் கண்டித்து கமுதியில் உள்ள அதானி சூரிய ஒளி மின் நிலையத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் மசோதா: அதானி மின் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Dec 14, 2020, 1:53 PM IST

Updated : Dec 15, 2020, 8:14 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அதானியின் சூரிய ஒளி மின் நிலையம் அமைந்துள்ளது. இதன் முன்பாக இன்று (டிச. 14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் பிரிவு மாவட்டச் செயலாளர் முத்து விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் சூரிய ஒளி மின்நிலையம் முன்பாக முற்றுகையிட்டனர்.

மேலும், போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் காவல் துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க...'கொள்கைகள் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்துவோர்களே பிரிவினைவாதிகள்'

Last Updated : Dec 15, 2020, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.