ராமநாதபுரம் அருகே முதுனாள் கிராமத்தில் வயல் பகுதியில் மயில்கள் உயிரிழந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர் வயல்வெளிகளில் அங்கொன்றும் இங்கொன்றும் கிடந்த 6 ஆண் மயில்கள், 6 பெண் மயில்கள் என மொத்தம் 12 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
பின் வயலோரங்களில் நெல் மணிகள் கிடந்தை பார்த்த வனத்துறையினர் அருகில் விசாரணை மேற்கொண்டதில், தெற்குத் தெருவைச் சேர்ந்த கோபி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருகிறார். வயலில் பயிரிடப்படுள்ள நெல் பயிர்களை பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விஷம் தடவிய நெல்தாணியத்தை வயல் முழுவதும் தூவியிருந்தது தெரியவந்தது.
உயிரிழந்த மயில்களை சூரங்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் சாதா, உடற்கூறாய்வு செய்தார். பின் அந்த நெல் தாணியங்கள் விஷம் உள்ளதா என்பதை உறுதி செய்ய ராமநாதபுரம் தடயவியல் ஆய்வகததில் கொடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது குறித்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலர் சதீஸ் கூறியதாவது ”விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க வேலி அமைத்துக் கொள்ளலாம் ஆனால் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் மீறினால் கடுமையான தண்டனைக்குள்ளாவர்கள்” என கூறினார்.
இதையும் படிக்க: 'கரும்பு வாங்க யாரும் வரவில்லை' - வேதனையில் விவசாயிகள்