ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகவுள்ள மைக்கேல்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மார் ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல், மிளகாய், பருத்தி, கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
கடந்த சில வாரமாக ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. இதையடுத்து, மைக்கேல்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மழையில் சேதமடைந்த பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். மனுவை பெற்ற ஆட்சியர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: பயிர் காப்பீடு தொகை: விடுபட்ட கிராமத்தை சேர்க்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு!