ETV Bharat / state

நாய்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி மீது வழக்குப்பதிவு! - ramanathapuram

ராமநாதபுரம்: நாய்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நாய்களை கொன்ற விவசாயி!
author img

By

Published : Jun 17, 2019, 10:26 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தில் 13 நாய்கள், காகம் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்துகிடந்தன. அதனையடுத்து விசாரணை செய்ததில், மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது நாய், சில நாட்களுக்கு முன்பு தெற்கு கொட்டகை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரது ஆடுகளை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் ஆட்டிறைச்சியில் விஷ மருந்தைக் கலந்து மங்கலம் கிராமத்தின் ஒரு சில பகுதிகளில் வீசியுள்ளார்.

dogs and crows have been killed
மர்ம முறையில் இறந்த காகம், நாய்கள்

இதை சாப்பிட்ட நாய்கள், காகம் போன்றவை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாரிமுத்து கடலாடி காவல் துறையிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் விஷம் வைத்து 13 நாய்களை கொன்றதாக விவசாயி முருகவேல் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இது குறித்து சுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என மங்கலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro: இராமநாதபுரம்
ஜூன்.16
13 நாய்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி மீது போலீஸார் வழக்கு பதிவு.Body:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தில் 13 நாய்கள், காகம் உள்ளிட்ட பறவைகள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்துகிடந்தன. அதனையடுத்து விசாரணை செய்ததில், மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது நாய், சில நாட்களுக்கு முன்பு தெற்கு கொட்டகை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரது ஆடுகளை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் ஆட்டிறைச்சியில் விஷ மருந்தைக் கலந்து மங்கலம் கிராமத்தில் வீசியுள்ளார். இதை சாப்பிட்ட நாய்கள், காகம் போன்றவை இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாரிமுத்து கடலாடி போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில விஷம் வைத்து 13 நாய்களை கொன்றதாக விவசாயி முருகவேல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறையினர், கால்நடை பராமரிப்புத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என மங்கலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.