ETV Bharat / state

ராமநாதபுரத்தில் விவசாயத்திற்கு புத்துயிர் அளித்துள்ள பண்ணைக்குட்டைத் திட்டம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பண்ணைக்குட்டைத் திட்டம் உள்ளது. பண்ணைக்குட்டைத் திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு...

பண்ணைக்குட்டைத் திட்டம்
விவசாயத்திற்கு புத்துயிர் அளித்துள்ள பண்ணை குட்டை திட்டம்
author img

By

Published : Sep 16, 2020, 10:23 PM IST

தமிழ்நாட்டில் வறட்சி மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. மாவட்டத்தில், சுமார் ஒரு லட்சத்து 75 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. மழைக் காலத்திற்கு முன்பே விவசாய நிலத்தை விவசாயிகள் தயார் செய்து மழைக் காலத்தில் அதிக நெல், மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். கடந்தாண்டை தவிர அதற்கு முன்பு நான்கு ஆண்டுகளும் முழு வறட்சியே ராமநாதபுரத்தில் நிலவியது.

நிலத்தடி நீர் பெருமளவில் விவசாயிகளுக்கு கை கொடுக்காததால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தனர். விவசாயிகள் வாழ்வு பாதிக்கப்படாத வண்ணம், வேளாண் பொறியியல் துறை மூலமாக பண்ணைக்குட்டை அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஒரு லட்சம் செலவில் இரண்டு அடி ஆழம் 30 அடி நீள அகலம் கொண்ட பண்ணைக்குட்டை வெட்டித் தரும் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் 2018-19ஆம் ஆண்டுகளில் 486 விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றனர். கடந்த ஆண்டில் புதிதாக 2001 விவசாயிகள் பண்ணைக்குட்டை வெட்டிக்கொண்டனர். இதன் மூலமாக மழைவரும் காலங்களில் நெற்பயிர்களை விவசாயம் செய்தும், மழை இல்லாத காலங்களில் பண்ணைக்குட்டைகளில் உள்ள நீரைக் கொண்டு மிளகாய், பருத்தி, போன்ற பயிர்களை பயிர் செய்து நல்ல முறையில் மகசூல் செய்து வருகின்றனர்.

விவசாயத்திற்கு புத்துயிர் அளித்துள்ள பண்ணை குட்டை திட்டம்

இதுதவிர பண்ணைக் குட்டைகளில் வளர்ப்பதற்கு மீன்வளத்துறை மூலம் மீன்குஞ்சுகள் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மீன் விற்று விவசாயிகள் கூடுதலாக வருவாய் ஈட்டி வருகின்றனர். பண்ணைக் குட்டைத் திட்டம் ராமநாதபுரம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருந்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள முதுகளத்தூர் அருகேயுள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணபதி, "20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்துவருகிறேன். தற்போது பண்ணைக் குட்டைகளில் நீரை சேமித்து அதன் மூலம் மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்துவருகிறேன்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை மூலமாக கொடுக்கப்பட்ட 500 மீன் குஞ்சுகளை பெற்று மீன்களை வளர்த்து அதன் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் வரை தனியாக வருவாய் ஈட்டி வருகிறேன். மொத்தமாக ஒரு ஆண்டிற்கு விவசாயம் மற்றும் மீன் மூலமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வருகிறேன்" என்றார்.

"பண்ணைக்குட்டைத் திட்டம் குறித்து என்னிடம் பலர் கூறினர். அதைத்தொடர்ந்து பரமக்குடியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் அலுவலர்களிடம் அதுகுறித்து கேட்டேன். அதன்பின்னர் வேளாண் அலுவலர்கள் பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தனர். தற்போது, மாதத்திற்கு ஒரு முறை மீன் வளர்ப்பின் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறேன்.

மழை பெய்யாத போது பண்ணைக்குட்டை நீரை பயிர்களுக்குப் பாய்ச்சி விவசாயம் செய்துவருகிறேன். குட்டையில் நீர் கீழே செல்லும்போது, நிலத்தடி நீரை பண்ணைக்குட்டைக்குள் பாய்ச்சி சிறிது காலம் வைத்து அதில் உப்புத்தன்மை குறைந்த பின்னர் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறேன். இந்த மீன்வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறேன்" என்கிறார் கீரனூரைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி.

மேலும், பண்ணைக்குட்டைத் திட்டம் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்புக்கும் உதவுவதாகவும், இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2,487 பண்ணைக்குட்டைகள் வெட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 158 மில்லியன் கியூபிக் பீட் மழைநீர் சேகரிக்கப்பட்டு அதன்மூலமாக 10ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுள்ளது.

இது தவிர மீன்வளத்துறையின் மூலமாக இணைந்து பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு முறையும் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலமாக தனியாக விவசாயிகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறைந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி வேளாண் பொறியியல் துறை மூலமாக பண்ணை குட்டை வெட்டி பயன் பெறலாம்" என்றார்.

வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் நல்ல பலனை அளித்துள்ளது. அரசின் திட்டத்தை முறையாகப் பயன்படுத்தினால், வருவாய் ஈட்ட முடியும் என்பதற்கு ராமநாதபுரம் விவசாயிகளே எடுத்துக்காட்டு.

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் 100 விழுக்காடு மானிய பண்ணைக்குட்டை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.