தமிழ்நாட்டில் நாளை (ஏப். 6) சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலுள்ள தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி பரபரப்புடன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 357 வாக்குச்சாவடிகள் 30 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள், பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தேர்தல் பார்வையாளர் விசோப் கென்யே நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டல அலுவலர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் மூன்று காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'சென்னை சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்!'