இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் திருநாளாகவும் அனுசரித்தும் கொண்டாடியும்வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில், நள்ளிரவில் நடைபெற்ற இயேசு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில், பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிறப்புப் திருப்பலியின் தொடக்கமாக இயேசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.