ETV Bharat / state

வாகன விற்பனையில் புரட்சியை ஏற்படுத்த உள்ள இ-பைக்! - சுற்றுச்சூழல் மாசு

ராமநாதபுரம்: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசு, புதுப்பிக்க இயலாத வளங்களின் தேவைகளினால் பெட்ரோல் இரு சக்கர வாகனங்கள் மீதான தேவை குறைந்து, அதற்கு மாற்றாக இ-பைக் எனப்படும் மின்சார இருசக்கர வாகனத்தின் மீது பொதுமக்கள் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதுகுறித்த சிறப்புத் தொகுப்பு!

e-bike-on-the-verge-of-revolutionizing-vehicle-sales

author img

By

Published : Sep 14, 2020, 8:31 PM IST

பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது பெட்ரோலின் விலை 90 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சாமானியரின் இல்லங்களில் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப வேண்டிய தேவை உள்ளது. மாதத்திற்கு 3 ஆயிரம் வரை அதற்கென செலவு ஆகிறது. அதுவும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வேலை உடையவர்கள் அதற்கென்று தனியான தொகையை சம்பளத்தில் இருந்து எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் கரோனா சூழல், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பெரும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. பெரும்பாலானோர் வேலை இழக்கும் சூழல் இருக்கிறது. மக்கள் பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க, மாற்றாக இ-பைக் எனப்படும் மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த வகையிலான இருசக்கர வாகனங்கள் ரூ.50ஆயிரம் முதல் சந்தையில் கிடைக்கின்றன. மேலும் இந்த வகை இருசக்கர வாகனங்களுக்கு மத்திய அரசு 27 விழுக்காடு மானியத் தொகையையும் வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரத்தில் ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள ஓகினாவா என்ற இ-பைக் தற்போது மிகப்பெரிய அளவில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இருசக்கர வாகனத்தில் இருக்கும் பேட்டரியை மின்சாரம் கொண்டு சார்ஜ் செய்தால், 160 கிலோ மீட்டர் வரை செல்லும் அளவிற்கு திறன் கொண்டதாகவும், மணிக்கு சுமார் 75 கி.மீ வேகத்தில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் 90 கி.மீ வேகத்தில் செல்லும் இரு சக்கர வாகனம், 60 கி.மீ வேகத்தில் செல்லும் வாகனம் எனப் பல வகைகளிலும், சந்தையில் மின்சார வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. தற்போது நிலவும் கரோனா சூழல் காரணமாகவும், பெட்ரோலின் கடும் விலையேற்றத்தினாலும் சாமானிய மக்கள் தற்போது இ-பைக் எனப்படும் மின்சார இருசக்கர வாகனத்தின் மீது, தங்களது முழுக் கவனத்தை திருப்பியுள்ளனர்.

ஏனெனில், ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினால், தோராயமாக 60 கி.மீ வரை சென்று வர முடியும் என்ற கணக்கை, வெறும் 3 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி (அதாவது அதற்கான செலவுத்தொகை 12 ரூபாயில்) 60 கிலோமீட்டர் வரை சென்று வர இயலும் என்பதே மின்சார இருசக்கர வாகனத்தின் பெரிய ப்ளஸ். தற்போதைய சூழலில் பெட்ரோல் வாகனம் அதிக அளவில் இருந்தாலும், வருங்காலத்தில் இ-பைக் எனப்படும் மின்சார இருசக்கரவாகனங்களின் வரவு பெரும் பங்கை வகிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

வாகன விற்பனையில் புரட்சியை ஏற்படுத்த உள்ள இ- பைக்

மேலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித கேடும் விளைவிக்காத வகையில் இந்த இ-பைக் சந்தையில் கிடைக்கின்றன. இதுகுறித்து ராமநாதபுரத்தில் இ-பைக் விற்பனையகம் வைத்துள்ள மும்மூர்த்தி கூறும்பொழுது, 'தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் இந்த இ- பைக் விற்பனையகத்தை ஜனவரி மாதம் தொடங்கினேன். பிப்ரவரி மாதம் வரை, பெரிய அளவில் மக்கள் இதை நாடி வரவில்லை.

கரோனாவால் மார்ச் மாதம் முதல் கடை திறக்கவில்லை. தற்பொழுது 4 மாதங்களாக விற்பனை நடைபெற்று வருகிறது. பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கடந்த மாதம் மட்டும் 33 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. எங்களிடம் உள்ளவை 35 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வரை வேகத்தில் செல்லக்கூடியவை. 12 ரூபாய் செலவு செய்தால், 60 கிலோமீட்டர் செல்லலாம். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது' என்றும் கூறினார்.

இதுகுறித்து பேசிய இ-பைக் டீலர் அரவிந்த், ' பாமர மக்கள்கூட வாங்கும் விலையில் இ-பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறைவானசெலவில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருப்பதால்,இ-பைக்குகளை அனைத்து தரப்பினரும் விரும்பி வாங்கி வருகின்றனர்'என்றார்.

கடந்த ஏழு மாதங்களாக இந்த இ-பைக்கை ஓட்டி வரும் உலகநாதன் என்பவர் கூறும்போது,'இந்த ஏழு மாதங்களில் மிகப்பெரிய அளவில் சேமிப்பை செய்துள்ளேன். நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து வருகிறேன். மூன்று நாட்களுக்கு ஒருமுறை வண்டியை பேட்டரி ரீசார்ஜ் செய்து பயன்படுத்துகிறேன். சர்வீஸ், பெட்ரோல், ஆயில் போன்ற செலவுகள் ஏற்படுவதில்லை. தற்பொழுது வரை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது' எனக் கூறினார்.

உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு, விலைவாசி, புதுப்பிக்க இயலாத வளங்களின் தேவை போன்ற பல்வேறு காரணிகளால் பொதுமக்கள் தற்போது இந்த இ-பைக்கை உபயோகிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இனி வருங்காலங்களில் சுற்றுச்சுழலைக் கருத்தில் கொண்டு, இந்த வகையிலான வாகனங்களின் தேவை பெருமளவில் மக்களுக்கு உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது!

இதையும் படிங்க:'மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தே எங்கள் வாழ்வாதாரத்துக்கு தீர்வு' - சுற்றுலா வழிகாட்டிகள் குறித்து சிறப்புத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.