ராமநாதபுரம்: முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஜூலை27) அனுசரிக்கப்படுகின்றது. இந்நாளில் அவரை நினைவுகூரும் விதிமாக பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள கலாமின் மணிமண்டபத்தில் அவரது குடும்பத்தினர் சிறப்பு துவா (பிரார்த்தனை) செய்தனர்.
தொடர்ந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அறிவுசார் மையம்
கடந்த 2017ஆம் ஆண்டு மணிமண்டபம் திறக்கும்போது அதன் அருகே அறிவுசார் மையம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. தற்போது வரை அறிவுசார் மையம் அமைப்பது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல் என இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் அப்துல் கலாம். அவரது மணிமண்டபத்திற்கு அருகில் போர்க்கால அடிப்படையில் அறிவுசார் மையம் அமைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அப்துல் கலாம் நினைவு நாள்- முதலமைச்சர், ஆளுநர் மரியாதை!