இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2019-20 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமேஸ்வரத்தில் 2019-20 ம் கல்வியாண்டில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனை செயல்படுத்தும் வகையில் கல்லூரியை இந்த ஆண்டே தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் பிஏ - தமிழ், பிஏ - ஆங்கிலம், பிஎஸ்சி- கணக்கு (ஆங்கில வழியில்), பி.காம் - வணிகவியல் (ஆங்கில வழியில்), பிஎஸ்சி - கணினி அறிவியல்(ஆங்கில வழியில்) 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் கூறுகையில், "ராமேஸ்வரத்தில் பேய்கரும்பு பகுதியில் இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உள்ளது. இந்த கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களுக்கு விண்ணப்பம் விநியோகிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, வகுப்புகள் செயல்படும்", என்றார்.