ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன். இவர் வாட்ஸ்அப்பில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.
எனவே அதிமுகவைச் சேர்ந்த கெளதம் என்பவர் அளித்த புகாரின் பேரில் நள்ளிரவில் முருகனின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் திமுகவினர் காவல் நிலையத்தின் முன்பு ஒன்று கூடினர்.
முருகன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 504, 505B, 66E என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க... '50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்போதுள்ள அரசு செய்துள்ளது' - அமைச்சர் வேலுமணி