ராமநாதபுரம்: கமுதி வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட மேலராமநதி, காவடிபட்டி, ராமசாமிபட்டி, நீராவி கரிசல்குளம், கீழமுடிமன்னார்கோட்டை, கிளாமரம், கோரப்பள்ளம், தோப்பநத்தம், சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு வீதி வீதியாகச் சென்று, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், மாவட்ட பொருப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்கு வாக்குச் சேகரித்தார்.
அப்போது கீழமுடிமன்னார்கோட்டையில் பொதுமக்கள் மத்தியில் ராஜகண்ணப்பன் பேசுகையில், 'பல்வேறு கருத்து கணிப்பின் அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்பார். திமுக தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
கீழமுடிமன்னார்கோட்டை, சிங்கம்பட்டி, மேலமுடிமன்னார்கோட்டை, ராமசாமிபட்டி உள்ளிட்ட பகுதியில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக மினி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.
தோப்பநத்தம் கிராமத்தில் கலையரங்கம், கீழமுடிமன்னார்கோட்டையில் நூலகம், நீராவிகரிசல்குளம் கிராமத்திலிருந்து காவடிபட்டி செல்லும் சேதமடைந்த சாலை சீரமைக்கபடும். இளைஞர்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்புக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.