ETV Bharat / state

'பாஜக மீது ஸ்டாலினுக்கு பயம்!'

ராமநாதபுரம்: பாஜக போன்ற மிகப்பெரிய கட்சியின் மீது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் இருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

DMK leader Stalin afraid of BJP said BJP senior leader Ila Ganesan

author img

By

Published : Mar 23, 2021, 8:02 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர் ஆலயத்தில் பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் குப்புராமுக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, பேசிய அவர், "பாஜக போன்ற மிகப்பெரிய கட்சியின் மீது திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பயம் இருக்கிறது. எப்படியாவது தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா காலமான பிறகு சாதாரண மனிதனாக இருந்து மரியாதைக்குரியவராக மாறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக மீது ஸ்டாலினுக்கு பயம்

இவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன், பாஜக கூட்டணி அமைத்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தக் கூட்டணிக்கு மக்கள் உறுதுணையாக இருந்து, மீண்டும் இதே ஆட்சி மலர வாக்குகளை வழங்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.