ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார். அப்போது மக்களின் குறைகளை புகார் பெட்டி மூலம் மனுவாக பெற்றார்.
தொடர்ந்து திருவாடானை பகுதியைச் சேர்ந்த சந்தியாகு என்ற விழித்திறன் இழந்த மாற்றுத்திறனாளியின் மனுவினை எடுத்தார். அப்போது சந்தியாகுவிடம் ஸ்டாலின் பேசிய போது, தான் ஆசிரியர் தகுதி தேர்வில் 2013 வெற்றி பெற்றும், தனக்கு தற்போது வரை பணி வழங்கப்படவில்லை என சந்தியாகு தெரிவித்தார்.
இதற்கு மறுமொழியாக, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும் என ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது ஸ்டாலினை நேரில் தொட்டு பார்த்து கட்டித் தழுவ வேண்டும் என்று தனது ஆசையை சந்தியாகு வெளிப்படுத்தினார். உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் சந்தியாகுவை தனதருகே அழைத்து அவரை ஆரக் கட்டித்தழுவினார்.
இதையும் படிங்க:சீர்காழியில் பரப்புரையை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்