இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே கடந்த இரண்டு நாட்களாக புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மாறி அதே இடத்தில் நீடித்து வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக இராமேஸ்வரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. தற்போது மழை குறைந்து உள்ளது இந்நிலையில் இராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரம் குடியிருப்பில் மழைநீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து (இன்று டிச. 06) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று அந்தப் பகுதிகளை ஆய்வு செய்தார்.
மேலும் தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்நோக்கு புயல் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் உரையாடி அவர்களை வீட்டுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
அதேபோல் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் உள்ள நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும் அலுவளர்களுக்கு உத்தரவிட்டார்.