ETV Bharat / state

புதியதாக கரோனா தொற்று இல்லை - மாவட்ட ஆட்சியர் - Tamil latest news

இராமநாதபுரம்: மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை 4,243 பேருக்கு செய்யப்பட்டதில் 4,031 பேருக்கு தொற்று இல்லை, 182 பேருக்கான முடிவுகள் வரவேண்டியுள்ளது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

கரோனா தொற்று இல்லை
கரோனா தொற்று இல்லை
author img

By

Published : May 14, 2020, 7:00 PM IST

இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரையில் 4, 243 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 4, 031 பேருக்கு கரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. நேற்று (மே 13) எடுக்கப்பட்ட 182 பரிசோதனைகளுக்கான முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் மாவட்டத்தில் தற்போதுவரை 30 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததில் 18 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் மீதமுள்ள 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அங்கு கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் அனைவரும் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பிடியிலிருந்து விடுவிக்குமா எறும்புதின்னிகள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.