ETV Bharat / state

ஏழை, எளிய மக்களுக்கு கமுதி காவல் துறையினரின் சேவை - கமுதி காவல் துறை

ராமநாதபுரம்: கமுதி காவல் துறையினர் சார்பில் 36 ஏழைக்குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கியத் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஏழை எளிய மக்களுக்கு கமுதி போலீசாரின் சேவை

author img

By

Published : May 31, 2021, 3:49 PM IST

ராமநாதபுரம் : தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையின் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் மக்களின் தேவைகளுக்காக அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவை வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல ஏழைக் குடும்பங்கள் பொருளாதாரத் தட்டுப்பாடு காரணமாக, இவற்றை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பேரில், கமுதி டிஎஸ்பி பிரசன்னா தலைமையில், அபிராமம் ஆய்வாளர் மோகன், பெருநாழி காவல் நிலைய ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல் துறையினர் கமுதி நாராயணபுரத்தில் உள்ள 36 ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, ரூ.200 மதிப்புள்ள காய்கறித்தொகுப்பும், மேலக்கொடுமலூரில் உள்ள 20 குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களும், பெருநாழியில் உள்ள 30 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, முட்டை உள்ளிட்டப் பொருட்களும் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.

இதையும் படிங்க: வயிற்றுவலி நோயாளிக்கு கரோனா வார்டில் சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.