திருவாடனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு நேற்றைய தினம் எம்எல்ஏ கருணாஸ் ராமநாதபுரம் வந்திருந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் பரவியது.
இதுகுறித்து கருணாஸ் தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, ''என்னிடம் கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளது. நேற்று நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்தேன் என்பது தவறான தகவல். இடுப்பில் வெறும் துப்பாக்கி உறை மட்டுமே இருந்தது. அதில் துப்பாக்கி இல்லை. மறாக காரில்தான் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பேன் என்றார்.