தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு எனவும் அறிவித்துள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல்25) முழு ஊரடங்கு என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முடங்கி காணப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம், கடைகள், முக்கிய விதிகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குறிப்பாக பொதுமக்களின் தேவையான மருந்தகங்கள், உணவகங்களில் பார்சல், பால் விற்பனையகம் உள்ளிட்டவற்றையே தற்போது இயங்குகின்றன. இந்த ஊரடங்கிற்கு மக்கள் முழுதுமாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.