மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் எல்லைப் பகுதியில் தங்கி போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், ராமநாதபுரத்தில் சிஐடியு சார்பாக பரமக்குடி, ராமநாதபுரம், சிக்கல் ஆண்டித்தேவன், வலசை, கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டத்தில் 15 பகுதிகளில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் சிக்கலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவாஜி உள்ளிட்ட சிஐடியு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: சில்லறை வணிகத்தில் கால் பதிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் சதி!