வங்கக் கடலில் இருந்து சென்னையில் தென் மற்றும் தென் கிழக்கே 740 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
இது மேலும் வலுவடைந்து காரைக்கால், மகாபலிபுரம் அருகே, வரும் 25ஆம் தேதி புயலாகக் கரையை கடக்க உள்ளது. இதற்கு நிவர் எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.
இதனால் மீனவர்கள் வரும் 27ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதிக மழை காற்றுடன் பெய்ய வாய்ப்பு உள்ளது என அந்தக் கூண்டு குறிக்கிறது.