ETV Bharat / state

கஜா புயல் பாதிப்பு - மீனவர்களுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் குஞ்சுகள்! - ramanadhapuram latest news

ராமநாதபுரம்: கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புனரமைப்பு, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் குஞ்சுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

cyclone-rehabilitation-scheme-in-ramanadhapuram

author img

By

Published : Feb 26, 2021, 3:14 PM IST

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புனரமைப்பு, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உபதிட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, ஒருகிணைந்த கடல் கூண்டு மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, ஆளி வளர்ப்பு , வள்ளம், மீன் விற்பனை அங்காடி ஆகியவை 75 சதவீதம் அரசு மானியம், 25 சதவீதம் பயனாளிகள் பங்களிப்புத் தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவற்றில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கென ஒரு அலகிற்கு 24 லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாய் என்ற அடிப்படையில், 10 அலகுகளுக்கு 2 கோடியே 48 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 அலகில் மண்டபம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு பகுதிக்கென இரண்டு அலகுகள் ஒதுக்கப்பட்டு அரசு பங்களிப்புத் தொகை ஒரு அலகிற்கு 18 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் என்ற அடிப்படையில் 36 லட்சத்து 46 ஆயிரத்து 800 ரூபாயும் , பயனாளிகள் பங்களிப்பு தொகை ஒரு அலகிற்கு 6 லட்சத்து 07 ஆயிரத்து 800 ரூபாய் என்ற அடிப்படையில் 2 அலகுகளுக்கு 12 லட்சத்து15 ஆயிரத்து 600 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் குஞ்சுகள்

இதனில், கடல் கூண்டு மீன் வளர்ப்பிற்கென தேர்வு செய்யப்பட்டுள்ள கடல் சிப்பி, கடல் தாமரை ஆகிய குழுக்களுக்கு ஒரு கூண்டிற்கு 700 கொடுவா கடல் மீன் குஞ்சுகள் வீதம் 8 கூண்டுகளுக்கு 5 ஆயிரத்து 600 மீன்குஞ்சுகள், மீன்வளர்ப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் மூலம் பெற்று மீன்வளத் துணை இயக்குநர் அப்துல்லா முன்னிலையில் மீன்குஞ்சுகள் கூண்டுகளில் விடப்பட்டன.

இதையும் படிங்க: மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.